வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 1 ஜனவரி 2023 (00:02 IST)

வான வேடிக்கைகளோடு புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மக்கள்

2023
சிட்னியின் வானவேடிக்கை அதன் துறைமுகப் பாலம், ஓபரா ஹவுஸ் மற்றும் அதன் புகழ்பெற்ற துறைமுகத்தில் நடைபெற்றது.
 
 
2023ஆம் ஆண்டு பிறந்துவிட்ட உலகின் சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.
 
புதிய ஆண்டை முதன்முதலாக வரவேற்றது, பசிபிக் நாடான கிரிபாட்டி. அதைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் கழித்து நியூசிலாந்து புத்தாண்டைக் கொண்டாடியது.
 
ஆஸ்திரேலிய நகரத்தின் புகழ்பெற்ற வானவேடிக்கைக் காட்சிகளைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சிட்னியில் கூடினர்.
 
 
நவீனகால நாட்காட்டியை உருவாக்குவதற்காக வரலாற்றில் தொலைக்கப்பட்ட 10 நாட்கள்
 
சிட்னி தாவரவியல் பூங்காவின் மரத்தடியில் வானவேடிக்கையைக் கண்டு ரசிப்பதற்காக ஏராளமான மக்கள் கூடினார்கள்.
 
 
சிட்னி ஓபரா ஹவுஸில் நள்ளிரவில் வானவேடிக்கை நடப்பதைப் பார்க்க ஏதுவான இடத்தைப் பிடிப்பதற்காக மக்கள் முன்கூட்டியே கூடினார்கள்.
 
நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் ஹாக்லி பார்க் கொண்டாட்டங்கள், பட்டாசுகளோடும் இசை நிகழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டன.
 
 
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில், அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடந்த ஆடவர் பிக் பேஷ் லீக் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு பட்டாசுகளோடு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
 
 
தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள தா ஃபே கேட் என்ற இடத்திலுள்ள மின் விளக்குகளுக்கு முன்னால் புத்தாண்டைக் கொண்டாட வந்த பெண்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர்களைப் போலவே, பொதுமக்கள் தெருக்களில் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
 
 
இன்னும் மூன்று வாரங்களில் சீனப் புத்தாண்டைக் கொண்டாடவுள்ள நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையும் பலர் கொண்டாடுகின்றனர். கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள ஹூவாய் ஆனில் உள்ள வெஸ்ட் டூர் பூங்காவில் நடைபெற்ற வானவேடிக்கைகளும் ஒளிக் காட்சிகளும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளன.
 
 
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ல ஷென்யாங்கில் 2022 டிசம்பர் 30ஆம் தேதியன்று சீனப் புத்தாண்டான முயல் ஆண்டை முன்னிட்டு குவான்டாங் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நகரத்தில் 2023 ஹென்யாங் சர்வதேச பனி விழாவின் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணிகள் விளக்கு நிகழ்ச்சியைப் பார்வையிடுகின்றனர்.