திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (11:17 IST)

பிரையன் லாராவுக்கு கொரோனாவா –வெளியான தகவலால் பரபரப்பு!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சாதாரண பொதுமக்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் அடக்கம். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவானான பிரைன் லாராவுக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து மறுப்பு வெளியிட்டுள்ளார் லாரா. அதில் ‘எனக்கு கொரோனா என்ற செய்திகளைப் படித்தேன். அதில் உண்மை இல்லை. கரோனா அச்சுறுத்தல் நிலவும் இச்சூழலில் ஒரு சமூகத்தில் இதுபோன்ற செய்தியின் மூலம் பதற்றத்தை உருவாக்கக் கூடாது. இந்த செய்தி என்னைக் காட்டிலும் எனக்கு நெருக்கமானவர்களை அதிகமாக பாதித்துள்ளது, அதுதான் எனக்கு வருத்தமளிக்கிறது’ எனக் கூறியுள்ளார்.