உலக கொரோனா எண்ணீக்கை 1.89 கோடியாக உயர்வு: 7.10 லட்சம் பேர் மரணம்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்ந்துள்ளதால் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனாவற்கு 7.10 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலக அளவில் 1.21 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது
மேலும் அமெரிக்காவில் மட்டுமே நேற்று ஒரே நாளில் 54,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டதாகவும், இதனையடுத்து அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49.73 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 1,291 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,61,581 ஆக அதிகரித்துள்ளது
அமெரிக்காவை அடுத்து பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 54,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28.62 லட்சமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரேசிலில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 1,322 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 97,418 ஆக அதிகரித்துள்ளது