வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (15:35 IST)

இந்திய கிரிக்கெட் வீரர் பொது இடத்தில் அராஜகம்: வைரலாகும் வீடியோ பதிவு!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு பொது இடத்தில் முதியவர் ஒருவரை அடித்து அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.


 
 
ஹைதராபாத்தில் அம்பத்தி ராயுடு தனது எஸ்யூவி ரக காரில் அங்குள்ள ராஜிவ்காகாந்தி சர்வதேச மைதானத்திற்கு சென்றுள்ளார். காலை நேரத்தில் அதிவேகமாக கார் ஓட்டிய அவர், வாக்கிங் சென்ற முதியவர்களை உரசும் வகையில் சென்றுள்ளார். 
 
இதனால், அங்கிருந்த முதியவர் காரை மெதுவாக ஓட்டுமாறு சத்தமாக தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ராயுடு காரைவிட்டு இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
அந்த பகுதியில் இருந்த வேறு சில வாக்கிங் சென்ற மக்களும் அம்பத்தி ராயுடுவின் மீது குற்றம் சொன்னதால், கோபம் தலைக்கேறி, அந்த முதியவரை சட்டை காலரை பிடித்து அடித்துள்ளார். 
 
இதனால் அங்கு சில இளைஞர்கள் ஓடி வந்து அம்பத்தி ராயுடுவை விலக்கி விட்டுள்ளனர். இந்த காட்சி செல்போனில் வீடியோவாக பதியப்பட்டு இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.