ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (07:50 IST)

இலங்கை கிரிக்கெட்: தோல்வி மேல் தோல்வி: பொறுப்பு கேப்டனும் திடீர் விலகல்

சொந்த மண்ணில் ஜிம்பாவே அணியிடம் தோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவிடமும் படுதோல்வி அடைந்து வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை இழந்துவிட்ட இலங்கை, மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலாவது வெற்றி பெற முயற்சிக்கும் என கருதப்படுகிறது.



 
 
இந்த நிலையில் தோல்வி மேல் தோல்வி அடைந்து வருவதால் அணியில் இருந்து காயம் என்ற பெயரில் வீரர்கள் தப்பிக்கும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இலங்கை அணியின் கேப்டன் தரங்காவிற்கு பதிலாக களமிறங்கிய பொறுப்பு கேப்டன் கபுகேதாராவும் காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக மலிங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
ஏற்கனவே முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் தற்போது கபுகேதாராவும் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.