வியாழன், 28 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2019 (12:42 IST)

சித்திரை திருவிழா: தீபாராதனையுடன் தேரோட்டம்

மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள் கிழமை தொடங்கியது. வரும் 19ஆம் தேதி (நாளை) ஆற்றில் அழகர்  இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தீபாராதனைக்கு பிறகு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. திருவிழாவின் 11-ம் நாளான இன்று தேரோட்டம் இன்று காலை 5:30 மணிக்கு மேல் தொடங்குகிறது. இதற்காக கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்களில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் இன்று அதிகாலை  எழுந்தருளினர்.
 
தீபாராதனைக்கு பிறகு காலை 5 : 45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சுவாமி சுந்தரேசுவரர் , பிரியாவிடையுடன், உள்ள பெரிய  தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
 
அதிகாலையிலிருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மங்கள வாத்தியங்கள், மேளதாளம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தேரை வடம் பிடித்து இழுக்க பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது.