வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால் கோவை மாணவி கொலை ?
பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி என்ற பகுதியில் சாலையோரமாக இளம்பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒருவரை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் விசாரித்தனர். அதில் சடலமாகக் கிடந்த பெண், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தது தெரிந்தது.
ஏற்கனவே இவரைக் காணவில்லை என அப்பெண்ணின் பெற்றோர் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின் தான் போலீஸாருக்குத் தெரிந்துள்ளது.
மாணவி வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக சதீஸ் எனபரைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
இந்நிலையில் மாணவி கடைசியாக நின்ற இடத்தில் அவரிடைய செல்போன் சிக்னலும் ஒரே இடத்தில் இருந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சில வருடங்களுக்கு முன் மாணவியை திருமணம் செய்துகொள்ள வேண்டி அவரது பெற்றோரிடம் பெண் கேட்டிருக்கிறார் சதீஸ். ஆனால் மாணவி படித்துக்கொண்டிருந்தார் என்பதால் பெற்றோர் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் பெண் கேட்டுள்ளார்.இதற்கு பெண்ணின் பெற்றோர் மறுத்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் சிசிடிசி கேமராவில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் திண்டுக்கலலைச் சேர்ந்த சதீஸை கைது திண்டுக்கல்லில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சதீஸுக்கு பிரகதியை திருமணம் செய்துவைக்காமல் வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் சதீஸ் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
சதீஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், அவர் பலியான மாணவிக்கு உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது கோவை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் மாணவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.