திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (11:55 IST)

மாற்று சாதி திருமணம்: பெண்ணுக்கு வினோத தண்டனை கொடுத்த மனித மிருகங்கள்!!!

மத்தியபிரதேசத்தில் மாற்று சாதி வாலிபரை காதலித்து திருமணம் கொண்டதற்காக மனித மிருக கும்பல் ஒன்று இளம்பெண்ணுக்கு வினோத தண்டனை வழங்கியுள்ளது.
 
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் 20 வயது இளம்பெண் ஒருவர் வேறு சாதி இளைஞரை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
 
இதனையறிந்த அதே ஊரை சேர்ந்த மனித மிருக கும்பல் ஒன்று அந்த இளம்பெண்ணை தனது காதல் கணவனை தோளில் சுமந்தபடி நீண்ட தூரம் நடந்து செல்ல சொல்லியுள்ளனர். அந்த பெண் தனது காதல் கணவனை தோளில் சுமந்தபடி நீண்ட் தூரம் நடந்து சென்றுள்ளார். 
 
இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகவே, போலீஸார் இந்த கொடூர செயலை செய்ய தூண்டிய இரண்டு அயோக்கியன்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.