வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (14:56 IST)

'மூடர் கூடம்' இயக்குநர் நவீன் திடீர் பதிவுத் திருமணம்! காரணம் என்ன தெரியுமா!

‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். அந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது. 


 
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் பெயரிடப்படாத ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ஒன்றையும் இயக்குகிறார் நவீன். இப்படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது, 'அலாவுதீனின் அற்புத கேமரா'என்ற படத்தை இயக்கி, நடித்தும் உள்ளார். அவருக்கு ஜோடியாக 'கயல்' ஆனந்தி இப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 
 
இது ஒருபுறம் இருக்க தற்போது நவீன், திடீர் பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளார். சமத்துவ முறைபடி இந்த  திருமணத்தை நடத்தியுள்ளாக கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நவீன். 
 
அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். பிறந்தது. மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள் #மனிதசமத்துவம் என கூறியுள்ளார். 
 
இவருக்கு நண்பர்களும் திரைத் துறையினரும் தங்களது திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர்.