1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (18:41 IST)

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த காரியம்!

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் ஆசை வார்த்தகளை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
 
துரைப்பாக்கத்தை சேர்ந்த அந்த 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபன் அடிக்கடி சந்தித்து ஆசையாக பேசி வந்துள்ளான். இந்நிலையில் அந்த மாணவியிடம் சூர்யா ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தார். இதனைடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் மாணவியை கடத்தி சென்ற சூர்யா பட்டினப்பாக்கத்தில் இருப்பதாக கண்டுபிடித்தனர்.
 
உடனே அங்கு விரைந்த போலீசார் சூர்யாவை கைது செய்து மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கைதான சூர்யா மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.