நாளை ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை நிறுத்தம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளம் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மதியம் 2.05 மணி முதல் 3.45 மணி வரை மற்றும் இரவு 11.30 மணி முதல் 1.45 மணி வரை டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளம் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கணினிகளிலுள்ள தகவல்களை சேமித்து வைக்கும் பணியால் இணையதள சேவை முடக்கப்படுகிறது. மேலும் கணினி ஹேக்கர்களிடம் சிக்காமல் இருக்க தொழில்நுட்ப அம்சங்களை கணினியில் சேர்க்கும் பணி நடைபெற உள்ளதால் சேவையில் பாதிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ரயில் பயணிகள் இந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.