செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (18:11 IST)

ரஜினி முதல்வராக மகள் ஐஸ்வர்யா செய்த காரியம்!

நடிகர் ரஜினிகாந்த் பல வருட ஆலோசனைக்கு பின்னர் தற்போது தான் அரசியலில் குதித்துள்ளார். அவர் அரசியலில் வெற்றி பெற்று முதல்வராக அவரது மகள் ஐஸ்வர்யா சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
 
20 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டு இருந்த நடிகர் ரஜினி ஒரு வழியாக அரசியலுக்கு வந்துள்ளார். வந்ததும் படுசுறுசுறுப்பாக முதல் கட்டமாக ரஜினி மக்கள் மன்றம் என்ற செயலியை ஆரம்பித்து அரசியல் பணிகளை ஆரம்பித்துள்ளார்.
 
வர உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக கூறிய ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக தனது மன்ற நிர்வாகிகள் பெயரை வெளியிட்டு அடுத்தடுத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
 
இந்நிலையில் அவரது மகள் ஐஸ்வர்யா நெல்லை மாவட்டம், கீழப்பாவூரில் ஸ்ரீநரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார். இந்த கோயிலில் அரசியல்வாதிகள் அதிகமாக வழிபட்டு வருவார்கள். வழக்கு சிக்கல்களில் இருந்து விடுதலை பெறவும், பதவிக்காகவும் இங்கு சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.
 
இதைப்பற்றி அறிந்த ஐஸ்வர்யா இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து, தனது கணவர் தனுஷ் மற்றும் தந்தை ரஜினிகாந்த் பெயர்களில் அர்ச்சனை செய்துள்ளார். பின்னர் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் அமைதியாக தியானம் செய்த அவர் அங்கிருந்து புறப்பட்டார்.