தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை..
பழனியில் தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பழனி மாவட்டம் பாலசமுத்திரம் சாலையில் வரட்டாற்று பாலத்தின் கீழ் ஒரு வாலிபர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சாலையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளது தெரியவந்தது. வாலிபர் யார் எனவும், எந்த ஊரை சேர்ந்தவர் என்பதும் தெரியாததால் இது குறித்து போலீஸார் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த வாலிபர் வேறு பகுதிகளை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
உடல் நிர்வாணமாக உள்ளதால் அந்த வாலிபர் அணிந்திருந்த உடைகள் எங்காவது வீசப்பட்டுள்ளதா எனவும் தேடி வருகின்றனர்.