தமிழக அமைச்சரவை கூட்டம்; ஆழ்துளை கிணறுகளுக்கு புதிய சட்டம்?
தமிழக அமைச்சரவை கூட்டம் நவம்பர் 2ம் தேதி கூடவிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் திடீரென கூட்டப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கொள்கை ரீதியிலான முக்கியமான முடிவுகள் அதில் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியானதையடுத்து, ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான ஆலோசனையும் அதில் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் எதிர் வரும் பருவமழையினால் வெள்ளப்பெருக்கு, விவசாய நிலங்கள் சேதம் ஏற்படலாம் என்பதால் மழை சேதாரங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த முடிவுகளும் இந்த கூட்டத்தில் எடுக்கவுள்ளதாக பேசிக்கொள்ளப்படுகிறது.