ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (09:13 IST)

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விக்கிரவாண்டி, நாங்குநேரி எம்.எல்.ஏக்கள்

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் உடன், விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மரியாதை செலுத்தினர்

சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் முத்தமிழ்ச்செல்வன் (விக்கிரவாண்டி) நாராயணன் (நாங்குநேரி) ஆகியோர் எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் இன்று இருவரும் எ,.எல்.ஏ.வாக பதவியேற்கவுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும் அவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.