புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (08:44 IST)

மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்..

அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் கடந்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களை பணிக்கு திரும்புமாறும், பணிக்கு திரும்பாத அரசு மருத்துவர்களின் இடங்களை காலி இடங்களாக அறிவிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இவரை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர் பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.