2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!
2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளுக்கு மேல் கேட்க திட்டமிட்டு உள்ளேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வைகோ தற்போது ராஜ்யசபா எம்பி யாக இருக்கின்ற நிலையில், அந்த பதவியை தான் விட்டுக் கொடுத்துவிட்டு கூடுதலாக 2026 சட்டமன்ற தேர்தலில் சீட்டுகள் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபா சீட்டை விட்டுக் கொடுத்துவிட்டு, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 10 எம்எல்ஏக்களை மதிமுகவிலிருந்து சட்டமன்றத்திற்கு அனுப்ப இலக்கு வைத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, ராஜ்யசபா பட்டியலில் என்னுடைய பெயர் இல்லாவிட்டால் அதற்காக யாரும் திமுகவை திட்டி சமூக வலைதளங்களில் எழுதக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ராஜ்யசபா பட்டியலில் என்னுடைய பெயர் வராமல் கூட போகலாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் 2026 தேர்தலில் அதிக தொகுதிகளை பெறுவது தன்னுடைய இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் இப்போதே அதிக தொகுதிகள் வேண்டும் என்று வைகோ துண்டு போட்டு இருப்பது, கூட்டணி மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran