ஆபத்தான நிலையில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண்: போலி மருத்துவர் கைது
கருகலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் மருந்துச் சீட்டு இன்றி விற்பனை செய்யக் கூடாது என ஏற்கனவே மருந்தகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் அருகே திட்டக்குடி என்ற பகுதியில் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி சாப்பிட்ட பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்தநிலையில் கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட அறிவுறுத்திய அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற போலி மருத்துவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கருக்கலைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை கடந்த சில நாட்களுக்கு முன் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே சர்ச்சை எழுந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran