1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (09:43 IST)

மதுபான பாரில் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த 17 பெண்கள்: அதிரடியாக மீட்ட போலீஸ்!

mumbai bar
மதுபான பாரில் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த 17 பெண்கள்: அதிரடியாக மீட்ட போலீஸ்!
மும்பையில் மதுபான பாரில் 17 பெண்கள் ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அந்த பெண்களை அதிரடியாக மீட்டுள்ளனர். 
 
மும்பையின் முக்கிய பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் அமைக்கப்பட்டுள்ள பார் ஒன்றில் காவல்துறையினர் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது அந்த பாரில் 17 பெண்கள் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து 19 வாடிக்கையாளர்கள் மற்றும் அந்த உணவகத்தின் மேலாளர் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் அந்த அறையில் நான்கு பெண்கள் இருப்பதை கண்ட போலீசார் அந்த அறையை மேலும் ஆய்வு செய்தபோது ரகசிய அறை ஒன்று இருந்ததாகவும் அதில் 17 பெண்கள் இருந்ததாகவும் தெரிகிறது
 
இதனையடுத்து அந்த பெண்களை மகளிர் நல காப்பகத்தில் போலீசார் சேர்த்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
Edited by Siva