திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (21:03 IST)

பெண்கள், துர்காவின் உருவகம்: தீபிகா பிரச்சனை குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா

Divya Spandana
நடிகை தீபிகா படுகோன் பதான் என்ற திரைப்படத்தில் ஆபாசமாக காவி உடை அணிந்து நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் தனுஷ் நடித்த பொல்லாதவன் உள்பட பல படங்களில் நடித்த நடிகை திவ்யா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார், அவர் கூறியிருப்பதாவது:
 
சமந்தா விவாகரத்து குறித்தும் சாய்பல்லவி கருத்தும் ராஷ்மிகா பிரிவு குறித்தும் தீபிகா உடை குறித்துப் பலர் ட்ரோல் செய்கின்றனர்.
 
எதையும் தேர்வு செய்யும் சுதந்திரம் பெண்களின் அடிப்படை உரிமை. பெண்கள் துர்காவின் உருவம் கொண்டவர்கள். பெண் வெறுப்பு என்பது ஒரு தீமையானது. எனவே நாம் அதற்கு எதிராக போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்பை அடுத்து.
 
Edited by Siva