1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 2 மே 2024 (18:38 IST)

திட்டமிட்டபடி மே 6-ல் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகுமா.? தேர்தல் ஆணையத்திலும் அனுமதி கேட்பு..!!

Student
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே 6ஆம் தேதி வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ள நிலையில்,  தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
 
கடந்த மார்ச் மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் தயாராக இருக்கின்றன. வருகின்ற மே 6ம் தேதி காலை தேர்வு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இதற்கான ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமையே மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்கள் அனுப்பப்படுகின்றன. இதற்கிடையே தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
தற்போது, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அனுமதி பெறவேண்டியுள்ளது. எனவே, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கடிதம் வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.