வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 மே 2024 (19:00 IST)

சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை! என்ன காரணம்?

முன்னாள் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் திடீரென தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் அதேபோல் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நம் முன்னால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது காங்கிரஸ் கட்சி மற்றும் அந்த கட்சியின் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதை அடுத்து அவர் இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நாள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva