1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (07:32 IST)

2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு.. 13 மாநிலங்கள், 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு..!

தமிழகம் உட்பட சில மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த நிலையில் 13 மாநிலங்களில் 88 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளதாகவும் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய வாக்குப்பதிவில் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் கட்ட வாக்கு பதிவில் 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்  இன்றைய தேர்தல் வாக்களிக்க  15.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva