திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2024 (09:37 IST)

தேர்தல் நாள் ஏப்ரல் 19ஆம் தேதி வரை கடையடைப்பு போராட்டம்: வணிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு..!

vikramaraja
தேர்தல் நடத்தை விதி அமல்படுத்துவதன் காரணமாக வணிகர்கள் பல தொல்லைகளை சந்தித்து வருகிறார்கள் என்றும் உண்மையாகவே வாக்காளர்களுக்கு பணம் எடுத்துச் சொல்லும் அரசியல்வாதிகளை பிடிக்காமல் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருவதாகவும் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் தேர்தல் நாளான ஏப்ரல் 19 வரை தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை வைத்துள்ளார்.

தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும்போது எல்லாம் வணிகர்கள் அச்சப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்றும் வணிகர்கள் எடுத்து சொல்லும் தொகையை உயர்த்தாமல் இருப்பது நீதிக்கு முரணானது என்றும் அவர் கூறினார்

ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல்வாதிகள் எடுத்துச் செல்லும் ரொக்க பணம் இதுவரை கைப்பற்றப்பட்டது இல்லை என்றும் நேர்மையாக வணிகம் செய்பவர்களிடம் ரொக்க பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்

இன்னும் ஓரிரு நாளில் இது குறித்து தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட இருப்பதாகவும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க விட்டால் ஏப்ரல் 19ஆம் தேதி வரை தொடர் கடை அடைப்பு போராட்டம் நடத்த நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்

Edited by Siva