இன்று வெளியாகிறதா மக்களவை தேர்தல் தேதி? உடனே நடத்தை விதிகள் அமலாகும் என தகவல்..!
இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்த பணிகளை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமான் கட்சியினர் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் அதிகாரிகள் பயணம் செய்து தேர்தல் தேதியை நிர்ணயிப்பது குறித்து ஆலோசனை செய்த நிலையில் இன்று மாலை அதிகாரபூர்வமாக இந்தியா முழுவதும் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம் முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran