1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vijayakanth Pays last respect to ibrahim ravuthar

இப்ராஹிம் ராவுத்தர் உடலுக்கு விஜயகாந்த் நேரில் அஞ்சலி

இப்ராஹிம்
பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார். கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உழவன் மகன், கேப்டன் பிரபாகரன், பூந்தோட்டக் காவல்காரன், புலன் விசாரணை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக புரியாத ஆனந்தம் புதிதாய் ஆரம்பம் என்ற படத்தை தயாரித்தார்.

தமிழ் திரைப்பட சங்க தலைவராகவும் பதவி வகித்தார். அவரது உடல் சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இப்ராஹிம் ராவுத்தர் உடலுக்கு அவரது நண்பரும், தேமுதிக. தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
About Writer
Bala