வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (10:26 IST)

செல்போனுக்கு பதில் கல்லை அனுப்பிய பிளிப்கார்ட்: வேலூர் இளைஞர் அதிர்ச்சி!

வேலூர் இளைஞர் ஒருவர் பிளிப்கார்ட்டில் செல்போனை ஆர்டர் செய்து இருந்த நிலையில் அவரது செல்போனுக்கு பதில் உடைந்த டைல்ஸ்கள் வந்துள்ளதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 
 
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் விவோ ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக பிளிப்கார்ட்டில் கடந்த 11ஆம் தேதி ஆர்டர் செய்தார். ரூபாய் 13 ஆயிரத்து 399 மதிப்புள்ள இந்த செல்போனுக்கு பதில் அவருக்கு அந்த பார்சலில் உடைந்த டைல்ஸ் கல் இருந்தது
 
இதனால் மோகன் அதிர்ச்சி அடைந்த மோகன் இதுகுறித்து அவர் பிளிப்கார்ட்டில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் கூறியும் அவருக்கு மாற்று ஏற்பாடு செய்வதாக கூறி நாட்களை கடத்திக் கொண்டு உள்ளதாகவும், ஒரு கட்டத்தில் காலக்கெடு முடிந்து விட்டதாக கூறி உள்ளதாகவும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார் 
 
ரூபாய் 13 ஆயிரத்து 399 செலுத்தி செல்போன் வரும் என்று காத்திருந்த மோகனுக்கு தற்போது டைல்ஸ் கல்லை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.