1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rajkot announced smartphone price for second dose

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு செல்போன் பரிசு! – குஜராத்தில் அறிவிப்பு!

National
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் குஜராத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு செல்போன் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டு அலைகள் தீவிரமாக பரவிய நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதுவரை இந்தியா முழுவதும் 100 கோடி டோஸ் தடுப்பூசிகளுக்கு மேலாக செலுத்தப்பட்டுள்ளது. எனினும் பல மாநிலங்களில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இரண்டாவது டோஸ் போடுவதை ஊக்குவிக்க இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமிக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்! மக்கள் அதிர்ச்சி!