1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (15:18 IST)

ஆன்லைன் வகுப்பில் வெடித்த செல்போன்! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் ஆன்லைன் வகுப்பில் செல்போன் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் ஆன்லைன் வழியாகவே படித்து வருகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைவால் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஒரு பக்கம் ஆன்லைன் வகுப்புகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் சாத்னா மாவட்டத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் செல்போனில் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்துள்ளது. இதனால் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.