தொடர்புடைய செய்திகள்
- போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு வகுப்புகள்: அரசுக்கு ஐடியா கொடுக்கும் டிடிவி!
- கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்படுமா ?அமைச்சர் விளக்கம்
- ஒமிக்ரானால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுகிறதா? அமைச்சரின் அதிர்ச்சி விளக்கம்!
- பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு!
- புதுவையில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்!
இனி சுழற்சி முறையில் வகுப்புகள் இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி 3ஆம் தேதி முறை சுழற்சி முறையில் இனி வகுப்புகள் இல்லை என்றும் வழக்கமான வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி கடந்த சில மாதங்களாக உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடந்த நிலையில் இனிய ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் இல்லை என்றும் அதே போல் அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறையில் வகுப்புகள் என்று இயல்பாக வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
