1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (09:11 IST)

பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு!

கடந்த ஒரு மாத காலமாக கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வத்துடன் வகுப்புக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் ,கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.