1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (14:02 IST)

செந்தில் பாலாஜி என்ன தீவிரவாதியா? - தினகரன் விளாசல்

தமிழக காவல் துறை நடுநிலை வகிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையின் இழந்து விடக்கூடாது என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜி, 2015ம் ஆண்டு போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவரிடம் ரூ.4.25 கோடி மோசடி செய்தார் எனவும், மற்றொருவரிடம் ரூ.1.17 கோடி மோசடி செய்தார் எனவும் சென்னை நீதிமன்றத்தில் அவர் மேல் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த புகாரில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். எந்த இரண்டு வழக்குகளும் தற்போது நிலுவையில் இருக்கிறது.
 
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை செய்வதற்காக, தமிழக போலீசார் நேற்று கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்றனர். ஆனால், அவர் அங்கே இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “ எங்கள் தரப்பு எம்.எல்.ஏ-வான செந்தில் பாலாஜி மற்று பழனியப்பன் ஆகியோரை ஏதோ தீவிரவாதியை தேடுவது போல் போலீசார் தேடுகின்றனர். காவல்துறை நடுநிலை வகிக்க வேண்டும். ஒரு  தரப்பினருக்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டு மக்களிடம் உங்களுக்குள் நன்மதிப்பை கெடுத்துக்கொள்ளாதீர்.  வழக்கு இருந்தால் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வரப்போகிறார்.
 
எடப்பாடி பழனிச்சாமி ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனவர் இல்லை. சந்தர்ப்பம் காரணமாக முதல்வர் ஆனவர்” என அவர் தெரிவித்தார்.