1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dinakaran support mlas dis quallified

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர் தனபால் நடவடிக்கை

TTV Dinakaran
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


 

 
எடப்பாடி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். அதன் பின் அதிலிருந்து ஜக்கையன் எம்.எல்.ஏ மட்டும் விலகி எடப்பாடி அணிக்கே மீண்டும் சென்றுவிட்டார். தற்போது கூட்டணி எம்.எல்.ஏக்களின் ஆதரவை சேர்த்து மொத்தம் 21 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தினகரனுக்கு இருக்கிறது.
 
முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை அகற்றும் முடிவில் தீவிரமாக உள்ள தினகரன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஒருபுறமும் திமுகவும் ஆளுநர் சந்திப்பு, ஜனாதிபதியிடம் முறையீடு எனத் தொடங்கி தற்போது நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. எனவே, வருகிற 20ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி நீதிமன்றம் ஆணையிடும் எனத் தெரிகிறது. 
 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் நிச்சயம் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார்.


 

 
இந்நிலையில், இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய அரசியலைம்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, கட்சி மாறுதல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனபால் அறிவித்துள்ளார்.
 
இந்த அறிவிப்பு தினகரன் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
எடப்பாடி அரசை காப்பாற்ற சபாநாயகர் செய்த ஜனநாயக படுகொலை - துரைமுருகன் விளாசல்