வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (14:22 IST)

செந்தில் பாலாஜியை தேடும் போலீசார் - பழைய வழக்கில் கைது?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜியை கைது செய்யும் முயற்சியில் தமிழக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


 

 
கரூர் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், தினகரனின் ஆதரவாளருமான செந்தில் பாலாஜியை தமிழக போலீசார் தேடி வருகின்றனர். 
 
2015ம் ஆண்டு செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவரிடம் ரூ.4.25 கோடி மோசடி செய்தார் எனவும், மற்றொருவரிடம் ரூ.1.17 கோடி மோசடி செய்தார் எனவும் சென்னை நீதிமன்றத்தில் அவர் மேல் வழக்கு தொடரப்பட்டது.
 
ஆனால், அந்த புகாரில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். எந்த இரண்டு வழக்குகளும் தற்போது நிலுவையில் இருக்கிறது.
 
இந்நிலையில், கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள விடுதியில் மற்ற 17 எம்.எல்.ஏக்களுடன் தங்கியிருக்கும் அவரை தேடி, மத்திய குற்றப்பிரிவு  காவல் துறையினர் இன்று அங்கு சென்றனர். ஆனால், அவர் அந்த விடுதியில் இல்லை என்பதால், அவர் எங்கே என  போலீசார் தேடி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
அவரோடு சேர்த்து, தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே, தற்போது எம்.எல்.ஏ பதவியை இழந்துள்ளார் செந்தில்பாலாஜி. இந்நிலையில்தான் அவரை விசாரிக்க போலீசார் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால், அவரை கைது செய்யும் திட்டமில்லை. வெறும் விசாரணை செய்ய மட்டுமே நாங்கள் இங்கே வந்துள்ளோம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.