18 மட்டுமல்ல ; இன்னும் 12 ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் - எடப்பாடிக்கு அதிர்ச்சி தரும் தினகரன்
தங்கள் பக்கம் 12 எம்.எல்.ஏக்கள் ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்த்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் நேற்று சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தினகரன் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது எடப்பாடி அரசு. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரிடம் ஆலோசனை செய்தார். இந்நிலையில், அவர் இன்று தமிழகம் வருகிறார். அவர் சென்னை வந்தவுடன், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன் “எங்கள் பக்கம் 18 எம்.எல்.ஏக்கள் மட்டுமில்லை. இன்னும் 12 எம்.எல்.ஏக்கள் ஸ்லீப்பர் செல்களாக இருகிறார்கள். அவர்கள் அனைவரும் தற்போது அமைதியாக இருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அது தெரியும்” என அவர் கூறியுள்ளார்.