வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திருச்சி , சனி, 27 ஏப்ரல் 2024 (14:21 IST)

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் சார்பில் பீம நகர் அருகிலுள்ள  யாதவ தெருவில்   ஆம்புலன்ஸ் வசதி அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் மாநில தலைவர் பீம நகர் தலைமை வகித்தார். 
 
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு  ஆம்புலன்ஸை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
 
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,  மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வழக்கறிஞர்கள் முஸ்ஃபிரா, ஆனந்தகுமார்,52-வது வார்டு வட்ட திமுக செயலாளர் வி.செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
முடிவில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர்  ஜெ.அப்பாஸ் அலி அனைவருக்கும் நன்றி கூறினார்.