செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (15:56 IST)

விடுதியை உடனே காலி செய்ய வேண்டும் -18 எம்.எல்.ஏக்களுக்கும் தனபால் உத்தரவு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியை உடனே காலி செய்ய வேண்டும் என சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.


 

 
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய அரசியலைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, கட்சி மாறுதல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனபால் அறிவித்துள்ளார்.
 
இதற்கு தினகரன் மற்றும் மற்ற அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதோடு, இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களின் சார்பிலும், தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும், அரசு  சென்னையில் அவர்களுக்கு ஒதுக்கியுள்ள விடுதியை உடனே காலி செய்ய வேண்டும் என சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். அறைகள் காலி செய்யப்பட்டதும், அங்கு சீல் வைக்கப்படும் எனத் தெரிகிறது.