வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (20:51 IST)

தமாகவுக்கு 6 தொகுதிகள்: இரட்டை இலையில் போட்டி!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என செய்திகள் கசிந்ததால் தமாக தரப்பு அதிர்ச்சி அடைந்தது. இதனையடுத்து இன்று காலை தமாக தலைவர் ஜிகே வாசன் அவசர ஆலோசனை நடத்தினார்
 
இருப்பினும் அவர் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது தமாகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமாக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது தமாகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளின் பட்டியல் இதோ
 
1. திருவிக நகர்
 
2. ஈரோடு கிழக்கு
 
3. லால்குடி
 
4. பட்டுக்கோட்டை
 
5. தூத்துக்குடி
 
6. கிள்ளியூர்