செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (15:29 IST)

6 தொகுதி… இரட்டை இலை சின்னம் – வாசனுக்கு அதிமுக நிபந்தனை!

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில கட்சி கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. தமிழ் மாநில கட்சி 12 தொகுதிகள் கேட்டதாகவும் ஆனால் அதிமுக இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன் வந்ததாகவும் கூறப்பட்டது. அதிமுக கூட்டணியில் இருக்கும் மற்றக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வரை அறிவிக்கப்பட்டு விட்டன.

ஆனால் இன்னமும் தமாகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடியவில்லை. இந்நிலையில் இப்போது அதிமுக இறுதியாக 6 தொகுதிகள் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் அந்த 6 தொகுதிகளிலும் அதிமுகவின் சின்னமான இரட்டை சிலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.