வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (18:17 IST)

அதிமுக கூட்டணியில் பாஜக தொகுதிப் பட்டியல் வெளியீடு !

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையி அதிமுக தலைமை இன்று தங்கள் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் விவரத்தை இப்போது பார்க்கலாம்.

திருவண்ணாமலை,நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், கொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு,திருக்கோயிலூர்,திட்டக்குடி, கோயமுத்தூர், விருதுநகர், அவரக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி,  தனி, காரைக்குடி, தாராபுரம், ( தனி) , மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையொப்பம் இட்டுள்ளனர்.