ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (08:22 IST)

சொந்தமாக விமானம் வாங்கிய தமிழ் சினிமா தயாரிப்பாளர்!

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக உருவாகி வருகிறார் ஐசரி கணேஷ். தற்போது சிம்பு மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி கதாநாயக நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் சொந்தமாக விமானம் ஒன்று வாங்கியுள்ளது திரைவட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஐசரி கணேஷின் தந்த ஐசரி வேலன் எம்ஜிஆரின் நெருக்கமான நண்பர்களில் ஒருவராக இருந்து கல்வித்தந்தை ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.