1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (22:34 IST)

வடசேரி பேருந்து நிலையத்தில் போராட்டம் செய்த ஓட்டுநர்.

karur
உயர்நீதிமன்ற ஆணையை மதிக்க மாட்டேன் என்றுவடசேரி பேருந்து நிலையத்தில் போராட்டம் செய்த ஓட்டுநர்.
 
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட தெற்கு வள்ளியூர் பேருந்து நிறுத்தத்தில் SFS, TSS பேருந்துகள் நின்று செல்ல மதுரை உயர் நீதிமன்றம் ஆணை வழங்கியிருக்கிறது. மேற்படி பேருந்துகள் தெற்கு வள்ளியூர் விலக்கில் நின்று செல்ல வணிக மேலாளர்  ஜெரோலின் முறையாக செயல்படுத்தி வருகிறார். ஆனால் உயர்நீதிமன்றம் ஆணை கொடுத்தால் தெற்கு வள்ளியூரில் பேருந்தை நிறுத்த மாட்டேன் என TN 74 ன் 1841 564 SFS  பேருந்து ஓட்டுநர் ஞான பெர்க்கமான்ஸ் பயணிகளுக்கு இடையூறு செய்து இன்று  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேற்படி அந்த தடத்தில் அவருக்கு எதிர் முறையில் பேருந்தை ஒட்டி வரும்  ஓட்டும் ஓட்டுநர்  ஜீவகுமார், நடத்துனர் தேவ கடாக்ஷம் ஆகியோரும் இதே போன்று பிரச்னை செய்து வருகின்றனர். மாண்புமிகு நீதியரசர்கள் கொடுத்த நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீறி திராவிட மாடல் அரசிற்கு தொடர்ந்து அவ பெயரையும் , வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
 
மேலும் சபாநாயகர் தொகுதிக்கு உட்பட தெற்கு வள்ளியூர் பேருந்து நிறுத்ததை 15,000ற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.