செவ்வாய், 21 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 மார்ச் 2026 (17:02 IST)

2 வாரம் டைம்.. சென்னையிலே வைய்ங்க!.. சிபிஐ-க்கு கோரிக்கை வைத்த விஜய்!...

vijay
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கரூருக்கு சென்று அங்கு பலரிடம் விசாரணை நடத்தினார்கள்.. சம்பந்தப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார்கள்.. அதன்பின் தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில் கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகளான சி.டி. நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்..

அதோடு தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டது. எனவே கடந்த ஜனவரி 6ம் தேதி டெல்லி சென்று சிபிஐ விசாரணையில் கலந்து கொண்டார் விஜய். அதன்பின் சில நாட்களில் மீண்டும் டெல்லி சென்று விசாரணைக்கு ஆஜரானார். அதன்பின் விஜயி சிபிஐ அதிகாரிகள் அழைக்கவில்லை.. எனவே விஜயுடனான விசாரணை முடிந்து விட்டதாகவே பார்க்கப்பட்டது.. இந்நிலையில்தான் மார்ச் 10ம் தேதியான நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக இன்று காலை செய்திகள் வெளியானது..

ஆனால் இந்த சம்மன் அனுப்பப்பட்ட ஒரு வாரம் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.. அதோடு தேர்தல் பணிகள் இருப்பதால் இரண்டு வாரங்கள் கழித்து நீங்கள் சொல்லும் தேதியில் நான் ஆஜராக இருக்கிறேன் என விஜய் தீர்ப்பு சொன்னதாகவும், மேலும் டெல்லியாக இல்லாமல் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்திலேயே விசாரணைக்கு ஆஜராக விரும்புகிறேன் எனவும் விஜய் தரப்பு கோரிக்கை வைத்ததாக செய்திகள் கசிந்திருக்கிறது..

ஆனால் விஜயின் கோரிக்கைக்கு சிபிஐ தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்கிறார்கள். எனவே நாளை விஜய் டெல்லிக்கு செல்வரா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது..