திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 16 மார்ச் 2023 (16:24 IST)

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சுமூகத்தீர்வை காண வேண்டும் -டிடிவி. தினகரன்

dinakaran
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்கு  சொந்தமானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதை அடுத்து, தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி வரும் நிலையில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் இதற்குச் சுமூகத் தீர்வுகாண வேண்டுமென்று அமமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்கு  சொந்தமானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில் அடிமனையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போர் பலரிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளபோதும், இந்த தீர்ப்பால் தங்களது வாழ்விடத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் சிக்கல் ஏற்படுமோ என அச்சம் அடைந்துள்ளனர்

தமிழக அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும்போது, அங்கு குடியிருப்போரை அழைத்துப் பேசி,  அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் சுமூகத்தீர்வை காண வேண்டும் என வலியுறுத்துகின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.