செவ்வாய், 21 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 9 மார்ச் 2026 (16:24 IST)

போட்டியின்றி தேர்வான தமிழக ராஜ்யசபா எம்பிக்கள்.. 6 பேர் யார் யார்?

போட்டியின்றி தேர்வான தமிழக ராஜ்யசபா எம்பிக்கள்.. 6 பேர் யார் யார்?
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று வெளியிட்டார்.
 
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகிய இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். 
 
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, அதிமுக சார்பில் தம்பிதுரை மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
 
போட்டியிட வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததாலும், தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் முறையாக இருந்ததாலும் இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  இவர்கள் அனைவரும் விரைவில் மாநிலங்களவை உறுப்பினர்களாக பொறுப்பேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva