இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில்: எந்த மாநிலத்தில் தெரியுமா?
இந்தியாவில் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ திட்டம் மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் ஹூக்ளி ஆற்றின் அடியில் முதல் முறையாக மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேல் பரப்பிலிருந்து 33 மீட்டர் அடியில் அமைந்துள்ள இந்த மெட்ரோ ரயில் பாதை விரைவில் செயல்பட உள்ளது.
5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த ரயில் நிலையம் மெட்ரோ ரயில் இயக்கத்திற்காக இரண்டு சுரங்கங்கள் அமைக்கப்படும் என்றும் இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ திட்டம் இதுவாக தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பேட்டரியால் இயங்கக்கூடிய இந்த மெட்ரோ ரயில் கொல்கத்தாவின் எஸ்பிளனேடு என்ற பகுதியில் இருந்து ஹவுரா வரை சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற இருப்பதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீருக்கடியில் மட்டும் 16 கிலோமீட்டர் அளவில் இந்த தொலைவில் இந்த அளவில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva