1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thanks-For-Birthday-Greeting-Vijayakanth

பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி: விஜயகாந்த்

விஜயகாந்த்
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு நேரிலும், தொலை பேசி, கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
 
தேமுதிக சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், தமிழத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாவட்டக் கழகம் சார்பில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
 
இந்த நிலையில், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இன்று (25.08.2015) எனது பிறந்த நாளை முன்னிட்டு, என்னை நேரில் சந்தித்தும், தொலைபேசி, தொலைநகல், தொலைக்காட்சி, வாழ்த்து கடிதங்கள், மின்னஞ்சல் மூலம் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நான் திரையுலகில் இருந்த காலத்தில் என்னுடைய இயக்கம் ரசிகர் மன்றங்களாக இருந்த போது பிறந்த நாள் விழாவாகவும், தேமுதிக அரசியல் இயக்கமாக மலர்ந்தபோது வறுமை ஒழிப்பு தினமாகவும் என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளையும் பொது மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய வகையில் செயல்படுத்தி வருகிறேன்.
 
வறுமை ஒழிப்பு தினத்தை தமிழகமெங்கும் செயல்படுத்தி பல லட்சக்கணக்கான மக்களுக்கு நலஉதவிகள் பலவற்றை செய்த தேமுதிகவை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொதுச்செயலளர் முரளிதரராவ், திலீப்ஜி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் என்.சி.பி.வடிவேல் மற்றும் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட  அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 
About Writer
K.N.Vadivel