வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (09:09 IST)

ஆசிரியர் தகுதி தேர்வு: இணையதளத்தில் விடைத்தாள்கள் வெளியீடு..!

teachers
ஆசிரியர் தகுதி தேர்வு சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வின் விடைத்தாள்களை இணையத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
 
ஆசிரியர் பணியில் சேர்ப்பவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றது. 
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தாள் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வை ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஒரு எழுதினர் என்பதும் இந்த தேர்வின் முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் தேர்வு பிப்ரவரி 3 முதல் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வை சுமார் 4 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். இந்த தேர்வின் விடைத்தாள்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்வு எழுதியவர்கள் அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva