1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Time extended for ssc exam application

எஸ்எஸ்சி தேர்வுக்க்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் கால அவகாசம்!.

ssc exam
எஸ்எஸ்சி  தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி என்று இருந்த நிலையில் தற்போது ஒரு வார கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்காக எஸ்எஸ்சி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று கடைசி தேதியில் பலர் விண்ணப்பம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை பிப்ரவரி 24 ஆம் தேதி வரை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு வார கால அவகாசம் இருப்பதால் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு..!