எகிறும் மாடுகள்!. எஸ்கேப் ஆகும் வீரர்கள்!.. களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!...
பொங்கல் என்றாலே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தின் சில ஊர்களில் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு என்பது மாடுபிடி விளையாட்டு என்கிற பெயரில் தமிழகத்தில் பாரம்பரியத்தோடு தொடர்பு கொண்டது. பல வருடங்களாகவே தமிழர்களின் வீரத்தை போற்றும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வருட பொங்கலை முன்னிட்டு அவனியாபுரத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அதில் ஆயிரம் காளைகளுக்கும், 50 மாடுபுடி வீரர்களுக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பின் அதில் சில காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு மற்ற மாடுகளை விளையாட அனுமதிக்கப்பட்டது. மாடு முட்டி ஏதேனும் காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக 100 மருத்துவர்களும், மருத்துவ உபகரணங்களும், 12 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
முதல் சுற்றில் எந்த விரலும் மூன்று காளைகளை பிடிக்கவில்லை. மூன்று காளைகளை பிடிக்காததால் வீரர்கள் யாரும் இரண்டாவது சுற்றுக்கு செல்லவில்லை. தற்போது 2வது சுற்று நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் மக்கள் அங்கு சென்றுள்ளனர்.
அதிகப்படியான மாடுகளை பிடித்து முதல் பரிசை வாங்குபவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் ஒரு ஏசி கார் கொடுக்கப்படவுள்ளது. அதேபோல், துணை முதல்வர் உதயநிதி சார்பில் ஒரு டிராக்டர் கொடுக்கப்படவிருக்கிறது.